மூத்த குடிமக்களுக்கு மீண்டும் இலவச பயண டோக்கன்: எப்படிபெறுவது ?

மூத்த குடிமக்களுக்கான தமிழக அரசு பேருந்துகளில் இலவச பயண டோக்கன் அளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சில வருடங்களாக இந்த டோக்கன் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது மீண்டும் மூத்த குடிமக்களுக்கு இலவச பயணத்திற்கான டோக்கன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் சென்னையில் வாழும் மூத்த குடிமக்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் வகையில் டோக்கன் வழங்கப்படும் என சற்றுமுன் போக்குவரத்து துறைகளில் தெரிவித்துள்ளது.

சென்னை தி நகர், சைதாப்பேட்டை, மந்தைவெளி, திருவான்மையூர், அடையாறு உள்பட மொத்தம் 27 பணிமனைகளில் டிசம்பர் 21ஆம் தேதி வரை இந்த டோக்கன்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் இந்த டோக்கன் பெறுபவர்களுக்கு 60 வயதுக்கு மேல் இருக்க வேண்டும் என்றும் ஆறு மாதங்கள் வரை இந்த டோக்கன்களை பயன்படுத்தி பயணம் செய்யலாம் என்று மாநகர போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது

1 மாதத்துக்கு 10 டோக்கன் என ஆறு மாதங்களுக்கு 60 டோக்கன்கள் வழங்கப்படும் என்று மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் தெரிவித்துள்ளார். இந்த டோக்கன் பெறுவதற்கு வயது சான்றிதழ், ஆதார் அட்டை அல்லது ஓட்டுநர் உரிமம் ஏதாவது ஒரு அரசு ஆவணங்களை கொண்டுவரவேண்டும் என்றும் அத்துடன் இரண்டு பாஸ்போர்ட் சைஸ் வண்ண புகைப்படத்தையும் எடுத்துக் கொண்டு வரவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் சம்பந்தப்பட்ட ஆவணங்களின் அசலையும் கையில் வைத்திருக்க வேண்டும் என்றும் சரிபார்த்த பின் அந்த ஆவணம் மூத்த குடிமக்களிடம் திருப்பிக் கொடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் வழங்கும் இடங்கள் பின்வருமாறு:

bus1

bus2

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.