போலி தங்கநகை கொடுத்து ஏமாற்றிய விவகாரம்: தி.நகர் நகைக்கடை மீது வழக்குப்பதிவு

3d158553802c7d052f40b2ce72ff7911

சென்னை தி நகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் போலி நகைகள் கொடுத்து ஏமாற்றியதாக புகார் ஒன்று அளிக்கப்பட்டதை அடுத்து அந்த நகை கடையின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

சென்னை ஐயப்பன்தாங்கல் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கடந்த 2015ஆம் ஆண்டு தி நகரில் உள்ள புகழ்பெற்ற தங்க நகை கடை ஒன்றில் 24 கிராம் தங்க வளையல் வாங்கினார் அதேபோல் 2016ம் ஆண்டு 23 கிராம் தங்க செயின் ஒன்றை வாங்கியதாகவும் அவர் வாங்கிய தங்க வளையல் மற்றும் செயின் ஆகிய இரண்டுமே வெள்ளி கம்பிகள் மற்றும் அரக்குகள் உள்ளே இருந்ததாகவும் இதனால் தன்னிடம் அதற்கும் சேர்த்து தங்க நகைக்கு உரிய பணத்தை பெற்று ஏமாற்றியதாக புகார் அளித்துள்ளார் 

ஆனால் காவல் நிலையத்தில் இந்த புகார் குறித்து விசாரிக்கவில்லை என்பதால் அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணை செய்த போது சம்பந்தப்பட்டதாக தங்க நகை மாளிகை மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது

நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து தற்போது அந்த குறிப்பிட்ட தங்க நகைக்கடை நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர் தி நகரிலேயே மிகவும் புகழ்பெற்ற இந்த தங்க நகை கடையில் லட்சக்கணக்கானோர் இதுவரை தங்க நகை வாங்கி இருக்கும் நிலையில் தற்போது இந்த போலி நகை விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment