டேட்டிங் ஆப் மூலம் மோசடி.. போலீசார் எச்சரிக்கை!

கோவையை சேர்ந்த 30 வயதான இளைஞர் ஒருவர் சட்டவிரோதமாக டேட்டிங் ஆப்பில் இணைந்துள்ளார். அந்த செயலியில் ராக்கி என்ற இளைஞருடன் நண்பு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் இருவரும் தனிமையில் சந்திக்கலாம் என ராக்கி கூறி இருக்கிறார்.

இதனை நம்பி சரவணம் பட்டி அருகே ஆளில்லா கட்டிடம் அருகே இளைஞர் சென்றதாக தெரிகிறது. அங்கு 4 பேர் கொண்ட கும்பல் சுற்றிவளைத்தாக தெரிகிறது. பின்னர் இளைஞர் அணிந்திருந்த மோதிரம், தங்க செயின், செல்போன் மற்றும் கையில் வைத்திருந்த பணம் ஆகியவற்றை பறித்துக்கொண்டுள்ளனர்.

அடங்காத TTF வாசன்: காரை பறிமுதல் செய்த போலீசார்!!

இதனிடையே பாதிக்கப்பட்ட இளைஞர் காவல்நிலையத்தில் போலீஸில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் ராக்கி என்ற நபர் செயலில் பேசி வந்தது போலி என தெரியவந்தது.

இதனையடுத்து அதே செயலியில் போலீசார் தொடர்பு கொண்டு தனிமையில் சந்திக்கலாம் என வரவழைத்துள்ளனர். பின்னர் மறைந்திருந்த கும்பலை போலீசார் சுற்றிவளைத்து பிடித்துள்ளனர்.

நாளை இந்த மாவட்டங்களில் மழை பெய்யும்- வானிலை மையம் தகவல்!

அப்போது கார்த்திகேயன் உட்பட 4 இளைஞர்களை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். சட்ட விரோத டேட்டிங் ஆப்பில் மோசடிகள் அதிகரித்து வருவதால் இதுபோன்ற செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.