நகை பாலிஷ் போட்டு தருவதாக மோசடி – 2 பேர் அதிரடி கைது!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த காந்திநகரை சேர்ந்தவர் ராணி சந்திரிகா. இவரது மகள் 24 வயதான சந்திரகாந்தா ஆகிய இருவரும் வீட்டில் இருந்த போது அங்கு வந்த வடமாநில ஒருவர் தங்க நகைகளுக்கு பாலிஷ் போட்டு தருவதாக கூறியுள்ளார்.

அதன் பேரில் சந்திரகாந்தா தங்களது வெள்ளி மோதிரத்திற்கு பாலிஷ் போட்டு தருவதாக கூறியுள்ளார். பின்னர் கழுத்தில் இருந்த 2 பவுன் சங்க சங்கிலியை கழற்றி பாலிஷ் போட கொடுத்துள்ளார்.

குரூப் 2 தேர்வு முடிவு: டி.என்.பி.எஸ்.சி முக்கிய அறிவிப்பு!!

அப்போது இராசாயனத்தில் தங்க செயினை போடும் போது துண்டு துண்டாக கரைந்ததாக தெரிகிறது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த இருவரும் அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளனர்.

பின்னர் அவர்களை பிடித்து போலீசாரின் ஒப்படைத்தனர். பின்னர் நடத்திய விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment