பண மோசடி வழக்கு! நடிகர் சூரி விசாரணைக்கு ஆஜர்..!!

திரைப்பட காமெடி நடிகரான சூரியிடம் கடந்த 2015-ம் ஆண்டு சினிமா தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மற்றும் விஷ்ணு விஷாலின் தந்தையான் ஓய்வுபெற்ற டிஜிபி ரமேஷ் குடவாலா ஆகியோர் நிலம் வாங்கி தருவதாக கூறி 2 கோடியே 70 லட்ச ரூபாய் பணமோசடி செய்ததாக அடையாறு காவல்நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்திருந்தார்.

இந்நிலையில் புகார் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்து இருந்தார். அப்போது வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றியதுடன் 6 மாதத்திற்குள் வழக்கை முடிக்க உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த சூழலில் வழக்கானது சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைப்பெற்று வருகிறது. அதன் படி, 3 முறை மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு ஆஜராகி இருந்தார்.

அதன் தொடர்ச்சியாக தற்போது நான்காவது முறையாக நடிகர் சூரி விசாரணைக்கு ஆஜராகி, போலீசார் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார்.

மேலும், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற விசாரணையில் அவரிடம் கிட்டத்தட்ட 5 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு 110 கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டது. அதோடு ஓய்வுபெற்ற டிஜிபி ரமேஷ் குடவாலா மற்றும் அன்புவேல் ராஜன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.