பேங்க் ஆபீஸர் போல் நடித்து இளம்பெண்ணிடம் ஒன்றரை லட்சம் ரூபாய் மோசடி!!

நூதன முறையில் கொள்ளை சம்பவம் தற்போது அதிகரித்துள்ளது. குறிப்பாக வங்கிகளில் நூதன பேச்சுவார்த்தைகள் மூலம் கொள்ளை சம்பவம் அதிகரித்துள்ளது. பேங்க் ஆபீஸர் போல் பேசி பணத்தை பறிக்கும் கும்பலின் எண்ணிக்கை நம் இந்திய நாட்டில் தொடர்ந்து உயர்ந்து காணப்படுகிறது.

ஒருமுறை கடவுச்சொல்அதன் வரிசையில் தற்போது வங்கி சேவை மைய ஊழியர் போல் பேசி பெண்ணிடம் 1.5 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. சென்னை ராமாபுரத்தில் வங்கி சேவை மையத்தில் இருந்து பேசுவதுபோல் நடித்து 1.5 லட்சம் ரூபாய் மோசடி.

கடந்த மாதம் பிரபல தனியார் வங்கியில் கிரெடிட் கார்டு வாங்கியுள்ளார் 25 வயதுள்ள இளம்பெண். வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து பேசுகிறேன் என்று கூறி இளம்பெண்ணின் விவரங்களை கேட்டுள்ளனர் கொள்ளை கும்பல்.

அந்த இளம்பெண்ணின் செல்போன் எண்ணிற்கு லிங்க் ஒன்றை அனுப்பிய மர்மநபர்கள், அதில் அந்த பெண் ஒட்டுமொத்த விபரங்களை தெரிவித்துள்ளார். பெண்ணின் விவரங்கள் பதிவு செய்யப்பட்ட சிறிது நேரத்தில் அவருக்கு அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஏனென்றால் அவரது கிரெடிட் கார்டில் இருந்து 1.5 லட்சம் ரூபாய் எடுத்துள்ளனர். பணம் எடுக்கப் பட்டதாக செல்போனுக்கு வந்த அந்த குறுஞ்செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்த இளம் பெண் உடனடியாக போலீசில் புகார் அளித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment