தீரன் திரைப்பட பாணியில் நடைபெற்ற கொள்ளை சம்பவம்; பிடிபட்ட நான்கு இளைஞர்கள்!

எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை சம்பவங்கள் தான் நாள்தோறும் அரங்கேற்றிக் கொண்டு வருகிறது. இவை இளைஞர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆயினும் அவர்கள் காவல்துறையினரால் நிச்சயமாகவே கண்டுபிடிக்கப்படுகின்றன அதன் தொடர்ச்சியாக துப்பாக்கி சூடு நடத்திய கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் பிடிபட்டனர்.

அரக்கோணம் அருகே தீரன் திரைப்பட பாணியில் துப்பாக்கிச்சூடு நடத்தி கொல்லப்பட்ட வழக்கில் 4 பேர் பிடிபட்டனர். திருவாலங்காடு அருகே வியாசபுரத்தை சேர்ந்த இளைஞர்கள் 4 பேர் சிக்கினர். பிடிபட்ட 4 பேரிடம் இருந்து துப்பாக்கியை போலீசார் கைப்பற்றினர்.

கன்னிகாபுரத்தில் கடந்த 17ஆம் தேதி ஆடிட்டர் புஷ்கரன் வீட்டிற்குள் நுழைந்தவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி அங்கு கொள்ளையடித்தனர். துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் வெட்டியும் 25 சவரன் நகை மற்றும் 40 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர்.

துப்பாக்கி சூட்டில் ஆடிட்டர் புஷ்கரன் உள்பட 4 பேர் காயமடைந்தனர். அக்டோபர் 15-ஆம் தேதி அரக்கோணம் கிராமத்தில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரியின் துப்பாக்கி, மடிக்கணினியை திருடி சென்றனர். திருடிய துப்பாக்கியை பயன்படுத்தி ஆடிட்டர் புஷ்கரன் வீட்டில் கொள்ளையடித்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment