
செய்திகள்
மும்பையில் நான்கு மாடி கட்டிடம் இடிந்து விபத்து-17 பேர் உயிரிழப்பு!!
இன்று காலை மும்பையில் பெரும் அசம்பாவிதம் நிகழ்ந்தது. ஏனென்றால் இன்று காலை மும்பையில் 4 மாடி கட்டிடம் ஒன்று திடிரென்று கீழே விழுந்தது. இந்த இடர்பாடுகளை சிக்கி உயிர் எண்ணிக்கையும் சற்று அதிகமாகவே காணப்பட்டது.
ஏனென்றால் அந்த குடியிருப்பில் ஏராளமானோர் கூடி இருந்தனர் என்பதும் குறிப்பிடதக்கது. இதனால் தீயணைப்பு வீரர்கள் காலை முதலே அவர்களின் சடலங்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு இருந்தனர்.
இதனால் அவர்களின் சடலங்கள் தீயணைப்பு வீரர்கள் வரிசையாக மீட்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் மும்பையில் கட்டட விபத்து காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி மகாராஷ்டிரா மாநிலம் மும்பை குர்லாவில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. அடுக்குமாடி கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து இதுவரை 12 பேரும் ஏற்பட்ட நிலையில் மீட்பு பணிகள் நீடிக்கிறது என்றும் தகவல் கிடைத்துள்ளது.
