தமிழகத்தில் மின்சாரம் தாக்கி 4 பேர் பலி: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றிரவு மாண்டச் புயல் கரையை கடந்ததன் காரணமாக ஏராளமான மின்கம்பங்கள் விழுந்து கிடந்ததால் மின்கம்பிகள் அறுந்து கிடைத்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த சந்திரா தனது தங்கை மகன் மணிகண்டன் என்பவருடன் சாலையில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவர் தரையில் அறுந்து கிடந்த மின்சார கம்பியை எதிர்பாராதவிதமாக விதமாக மிதித்ததால் உயிருக்கு போராடியுள்ளார். இதனைக்கண்ட மணிகண்டன் தனது பெரியம்மாவை காப்பாற்றும் முயற்சியில் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனை அடுத்து இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அதேபோல் சென்னையில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த ஒரு பெண் உள்பட இருவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் புயல் காரணமாக அறுந்து கிடந்த மின்கம்பி இருக்கும் இடங்களில் பொதுமக்கள் கவனமாக செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டு வருகிறது.

மேலும் தமிழகம் முழுவதும் அறுந்து கிடந்த மின் கம்பிகளை சீர்செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும், அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டும் இன்றும் நாளையும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.