வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும்வெப்பச்சலனம் காரணமாக நான்கு நாட்களுக்கு கனமழை!!!

659dece7ae9969a6be2e12b63cb70a52

தற்போது தமிழகத்தில் கோடை காலம் குறைந்து காணப்படுகிறது. மேலும் தமிழகத்தில் தற்போது காற்று காலம் காணப்படுகிறது இதனால் பல பகுதிகளில் காற்றானது சூறைக்காற்று போல வீசுகிறது .இந்நிலையில் சில நாட்களாகவே தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது அதன்படி பல பகுதிகளில் பெய்த இதனால் பல பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி காணப்பட்ட நிலையில் தற்போது சென்னை வானிலை ஆய்வு மையமானது மேலும் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.e96d050939d43131d755286821f5f75c 1

அதன்படி தமிழகத்தில் இன்னும் 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை நீடிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதுவும் குறிப்பாக நீலகிரி கோவை டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. தேனி திண்டுக்கல் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது

 புதுவை காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னையில் உள்ள பல பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. 12ஆம் தேதி வரை நீலகிரி கோவை தேனி மாவட்ட பகுதிகளில் மிக கனமழையால் மண் சரிவு ஏற்பட கூடும் என்று கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment