Connect with us

மாஸ்டர் படபாணியில் காப்பகத்திலிருந்து சிறுவர்கள் தப்பி ஓட்டம்

master movie e1661147109222

செய்திகள்

மாஸ்டர் படபாணியில் காப்பகத்திலிருந்து சிறுவர்கள் தப்பி ஓட்டம்

சிறுவர்கள் காப்பகத்தில் இருந்து நான்கு சிறுவர்கள் தப்பி ஓட்டம். இரண்டு சிறுவர்கள் பிடிபட்ட நிலையில் தப்பி ஓடிய 2 சிறுவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். நெல்லை சந்திப்பு பாலபாக்கியாநகரில் சரணாலயம் என்ற பெயரில் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

இங்கு ஆதரவற்ற சிறுவர்-சிறுமிகள், பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள் மற்றும் குழந்தை தொழிலாளர்களாக உள்ளவர்கள் மீட்கப்பட்டு தங்க வைக்கப்படுகிறார்கள். மேலும் மதுவுக்கு அடிமையானவர்கள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களால் வாழ்க்கையை இழந்த குழந்தைகள் மீட்கப்பட்டு இங்கு கொண்டு வரப்படுகின்றனர்.

தமிழக அரசின் ஆதரவுடன் செயல்படும் இந்த சரணாலயத்தில் சிறுவர்களுக்கு தேவையான உணவு 3 நேரமும் வழங்கப்படுகிறது. உடை, இருப்பிடம் உள்ளிட்ட வசதிகளும் செய்து கொடுக்கப்படுகின்றன. குழந்தைகள் நலக்கமிட்டி மூலமாக இவர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள். இந்த காப்பகத்தில் ஏராளமான சிறுவர்கள் உள்ளனர்.

மது உள்ளிட்டவற்றுக்கு அடிமையான நெல்லை, குமரி மாவட்டத்தை சேர்ந்த 4 சிறுவர்களை, குழந்தைகள் நலக்கமிட்டியினர் மீட்டு நெல்லை சரணாலயத்தில் தங்க வைத்திருந்தனர். நேற்று இரவு அவர்கள் 4 பேரும் யாருக்கும் தெரியாமல் தப்பி சென்றனர்.

தகவல் அறிந்த சரணாலாய காவலாளி, அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக சந்திப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நெல்லையை அடுத்த தச்சநல்லூர் ரெயில்வே கிராசிங் பகுதியில் பதுங்கியிருந்த 2 சிறுவர்களை பிடித்து வந்து சரணாலயத்தில் ஒப்படைத்தனர்.

தப்பித்து சென்ற குமரி மாவட்டம் முரசன்கோடு மற்றும் நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவர்கள் 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சரணாலயத்தின் சுவர் 10 அடி உயரத்துக்கும் அதிகமானது. அந்த சுவரின் அருகே சென்று பெயிண்ட் அடிக்க பயன்படுத்தும் வாளியை கீழே போட்டு சக நண்பர்களின் உதவியுடன் 4 சிறுவர்களும் சுவர் ஏறி குதித்து தப்பி சென்றனர் என்பது பிடிப்பட்ட 2 பேரிடமும் விசாரித்தபோது தெரியவந்தது. இதையடுத்து தப்பி ஓடிய 2 சிறுவர்களை தேடி அவர்களின் சொந்த ஊர் உள்ள பகுதிகளுக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top