எஸ்.ஐ.பூமிநாதன் கொலை வழக்கில் 4 பேர் அதிரடி கைது!

திருச்சி ஐஎஸ்ஐ பூமிநாதன் கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

திருச்சி நவல்பட்டு சிறப்பு எஸ்ஐ பூமிநாதன் என்பவர் ஆடு திருடிய நபர்களை பிடிக்க முயற்சித்த போது மர்ம நபர்களால் சுற்றிவளைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் அமைக்கப்பட்ட ஒரே நாளில் தற்போது திருச்சி ஐஎஸ்ஐ பூமிநாதன் அவர்களை கொலை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட நால்வரில் இருவர் சிறுவர்கள் என்பதும் நான்கு பேர்களிடம் தற்போது போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

திருச்சி ஐஎஸ்ஐ பூமிநாதன் வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வரிடம் விசாரணை செய்தால் மேலும் சில திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment