Connect with us

புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அடிக்கல்! கோட்டாட்சியர் அலுவலக கட்டிடங்கள் திறப்பு: ஸ்டாலின்

mk stalin 1200

செய்திகள்

புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அடிக்கல்! கோட்டாட்சியர் அலுவலக கட்டிடங்கள் திறப்பு: ஸ்டாலின்

புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அடிக்கல்! கோட்டாட்சியர் அலுவலக கட்டிடங்கள் திறப்பு: ஸ்டாலின்

நம் தமிழ் நாட்டில் முதல் முறையாக முதல்வராக உள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். நம் தமிழக முதல்வர் ஸ்டாலின் நாள்தோறும் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து கொண்டு வருகிறார். அதோடு மட்டுமல்லாமல் நாள்தோறும் புதிய புதிய கட்டிடங்கள் நேரடியாகவோ அல்லது காணொளி மூலமாக திறந்து வைத்து வருகிறார். தமிழகத்தில் வரிசையாக மருத்துவ கல்லூரிகள், கட்டிடங்கள், அலுவலகங்கள் திறக்கப்பட்டு வருகிறது.

அதிலும் குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரியை திறந்து வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்.

அதன்படி தமிழ்நாட்டில் மயிலாடுதுறை ஆட்சியரக பெருந்திட்ட வளாகம் கட்டடத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூபாய் 114.45 கோடியில் மயிலாடுதுறை ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின்.

அதோடு மட்டுமல்லாமல் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களையும் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூபாய் 23.74 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலக கட்டிடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top