முன்னாள் மாநிலத் தலைவர் தற்போதைய மாநில தலைவர் இணைந்து அம்பேத்கர் சிலைக்கு மரியாதை..!!!

இன்றைய தினம் இந்தியா எங்கும் அம்பேத்கர் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று அரசியல் கட்சிகளுக்கு இடையே பிறந்தநாள் முன்னிட்டு கலவரம் ஏற்பட்டுள்ளது.

இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்துவதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் பாஜகவினருக்கு இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த முரண்பாடு வாக்குவாதத்தில் தொடங்கி அதன் பின்னர் கைகலப்பாக மாறியது.

இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதோடு மட்டுமில்லாமல் பாரதிய ஜனதா கட்சியினரும் காயங்கள் ஏற்பட்டது. இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் தற்போது கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

அம்பேத்கர் 132 வது பிறந்தநாளை ஒட்டி அவரது திருவுருவ சிலைக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மரியாதை செலுத்தினார். சென்னை கோயம்பேட்டில் அம்பேத்கர் சிலைக்கு மத்திய இணையமைச்சர் முருகன், அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் பாஜகவினர் இடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த பாஜகவினரை சந்தித்து முருகன் அண்ணாமலை ஆறுதல் தெரிவித்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment