Tamil Nadu
மன்னிப்பு கேட்டதால் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ: ஓபிஎஸ்-ஈபிஎஸ் அறிக்கை
முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எதிர்க்கோட்டை எஸ்.ஜி. சுப்பிரமணியன் என்பவர் மீண்டும் கட்சியில் இணைந்து பணியாற்ற அனுமதிக்கப்படுகிறார் என்று அதிமுக தலைமை தெரிவித்துள்ளது
தனது செயலுக்கு வருந்தி கடிதம் மூலமும் நேரிலும் மன்னிப்பு கோரியதால் கட்சியில் இணைந்து பணியாற்ற அவர் அனுமதிக்கப்படுகிறார் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ எதிர்க்கோட்டை எஸ் ஜி சுப்பிரமணியம் அவர்கள் தனது செயலுக்கு வருந்தி நேரிலும் கடிதம் மூலமும் மன்னிப்பு கோரி தன்னை மீண்டும் கழகத்தில் இணைத்துக் கொள்ள வேண்டி கேட்டுக் கொண்டதால் இன்று முதல் உறுப்பினராக கழகத்தில் இணைந்து கொள்ள அனுமதிக்கப்படுவர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து சாத்தூர் தொகுதியில் தேர்தல் பணிகளை எஸ்.ஜி.சுப்பிரமணியம் தற்போது கவனித்து வருகிறார்.
