Connect with us

மசோதாவை ஆளுநர் திரும்பப்பெற வேண்டும்! முன்னாள் எம்எல்ஏ உண்ணாவிரத போராட்டம்!!

ஆர் என் ரவி

Tamil Nadu

மசோதாவை ஆளுநர் திரும்பப்பெற வேண்டும்! முன்னாள் எம்எல்ஏ உண்ணாவிரத போராட்டம்!!

மசோதாவை ஆளுநர் திரும்பப்பெற வேண்டும்! முன்னாள் எம்எல்ஏ உண்ணாவிரத போராட்டம்!!

இன்றையதினம் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டின் இரண்டாவது முறை அனைத்து கட்சி கூட்டம் ஆகும். ஏனென்றால் இதற்கு முன்னதாக ஜனவரி மாதத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

அதில் நீட் விலக்கு மசோதா பற்றி அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது. இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு ஆளுநர் மாளிகையில் இருந்து தமிழக அரசு அனுப்பியிருந்த நீட் விலக்கு மசோதாவை திரும்ப அனுப்பியதன் விளைவாக இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது.

இதில் பாஜக பங்கேற்காது என்று நேற்றைய தினமே அண்ணாமலை அறிவித்திருந்தார். இந்த நிலையில் நீட் விலக்கு மசோதாவின் காரணமாக திமுக முன்னாள் எம்எல்ஏ உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அதன்படி நீட் விலக்கு மசோதாவை இரண்டு நாட்களுக்கு முன்பு திருப்பி அனுப்பிய ஆளுநரை மீண்டும் திரும்பப் பெறக் கோரி திமுக முன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜ் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலை முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் முன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜ். தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதை கண்டித்து அவர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Nadu

To Top