முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு! வீட்டிற்கு முன்பு ஒன்று திரண்ட ஆதரவாளர்கள்!!

தொடர்ச்சியாக தமிழகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினரின் சோதனை நடைபெற்று வருகிறது, அதன் வரிசையில் முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதன்படி தங்கமணி அவரது மனைவி சாந்தி மற்றும் மகன் தரணிதரன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது. தொண்டர்கள் வீட்டிற்கு முன்பு ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

தங்கமணி

2016 முதல் 2020-ம் ஆண்டு மார்ச் வரை வருமானத்தை அதிகமாக ரூபாய் 4.85 கோடி சொத்து சேர்த்ததாக தங்கமணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக சேர்க்கப்பட்ட சொத்துக்களை முன்னாள் அமைச்சர் தங்கமணி கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கோடிக்கணக்கான சொத்துக்களை தங்கமணி கிரிப்டோ  கரன்சியில் முதலீடு செய்துள்ளார். தங்கமணியின் மனைவி பெயரில் தொழில் எதுவும் இல்லாத நிலையில் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தங்கமணி ஊழல் பணத்தை மறைப்பதற்காக தியாகராயர் நகரில் இல்லாத நிறுவனம் பெயரில் கணக்கு காட்டப்பட்டுள்ளது. அதோடு தங்கமணி நண்பர் வீட்டிலும் அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.

நாமக்கல் மாவட்டம் பெரியபட்டியில் உள்ள தங்கமணியின் நண்பர் மோகனின் வீட்டில் அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது. நல்லிபாளையத்தில் உள்ள பி.எஸ்.டி கட்டுமான நிறுவன அலுவலகம் சத்தியமூர்த்தி அண்ட் கோ அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.

கரூர் அருகே வேலாயுதம்பாளையத்தில் உள்ள தங்கமணியின் உறவினர் சாந்தி என்பவர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே வேலுமணி, விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சேலத்தில் உள்ள தங்கமகன் தரணிதரன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து வருகிறது. சேலத்தில் தங்கமகன் உறவினர் நண்பர்கள் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் நட்சத்திர ஓட்டல் உள்பட 4 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தி வருகிறது. சேலத்தில் அஸ்வ பார்க் நட்சத்திர ஓட்டலில் சோதனை நடைபெற்று வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment