காலையில் ஓபிஎஸ் சந்திப்பு….! மார்ச் 11ஆம் தேதி வரை முன்னாள் அமைச்சருக்கு சிறை தண்டனை உத்தரவு! பின்னணி என்ன?
பிப்ரவரி 19-ஆம் தேதி நம் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. எந்தத் தேர்தலிலும் இல்லாத வகையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியாக முடிந்தது. ஆனால் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுக தொண்டரை அரை நிர்வாணப்படுத்தி தாக்கியிருந்தார். இதன் காரணமாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனால் அவர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரை சந்திக்க இன்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கே.பி. முனுசாமி மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோர் சென்றுந்தனர், இன்று காலை சந்திப்பு நடைபெற்றது.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மார்ச் 11-ஆம் தேதி வரை சிறை உறுதி செய்யப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி ரூபாய் 5 கோடி மதிப்புள்ள தொழிற்சாலையை அபகரித்த புகாரில் ஜெயக்குமாருக்கு மார்ச் 11ஆம் தேதி வரை சிறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
6 பிரிவுகளில் கைதான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நீதிமன்ற காவல் விதித்து ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
