முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு கிடைத்தது ஜாமீன்! திருச்சியிலே இருக்க நிபந்தனை!!

நம் தமிழகத்தில் அடுத்தடுத்த தொடர் வருமான வரி சோதனை நடைபெற்றது. அதுவும் குறிப்பாக அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் வீடுகள், அலுவலகங்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்றது. அதில் ஏராளமான பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அந்த சூழலில் யாரும் எதிர்பாராத விதமாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாகி இருந்தார். ஏனென்றால் அவர் மீது ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூறி மூன்று கோடி பணம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. அதன்பின்னர் தலைமறைவான ராஜேந்திரபாலாஜி தேட தனிப்படை காவல் துறையினரும் அமைக்கப்பட்டன.

அடுத்தடுத்து ராஜேந்திர பாலாஜி மீது பணமோசடி வழக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. அதன் பின்னர் கர்நாடக மாநிலத்தில் அருகே சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டார். ராஜேந்திர பாலாஜியோடு சேர்த்து பாஜக நிர்வாகி ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமின் கிடைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உச்ச நீதிமன்றம் 4 வார இடைக்கால ஜாமீன் வழங்கி உள்ளது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சியிலேயே ராஜேந்திர பாலாஜி தங்கியிருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment