பட்டியலினத்தவர் குறித்து சர்ச்சை பேச்சு; மூத்த பத்திரிகையாளர் மீது அதிமுக முன்னாள் அமைச்சர் போலீசில் புகார்!

மூத்த பத்திரிகையாளர் ரவீந்திர துரைசாமி, மீது முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ரோசனை காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாநிலங்களவை உறுப்பினருமாகிய சி.வி சண்முகம் இன்று புகார் அளித்துள்ளார்.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய சி.வி சண்முகம், எனக்கு 17 சதவீதம் பறையர்கள் வாக்களிக்காததால் தான் நான் தோற்று விட்டதாக நான் பேசியதாக கடந்த ஒன்பதாம் தேதி அன்று ரவீந்திர துரைசாமி அவதூறாக ஒரு செய்தியை சொல்லி இருந்தார்.

அவதூறு பரப்பிய ரவிந்தர துரைசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளதாக செய்தியாளர்களிடம் பேசிய சிவி சண்முகம் தெரிவித்தார். நான் அப்படி பேசியதும் இல்லை 20 வருட அரசியலில் இதுபோன்று எண்ணியதிலும் இல்லை என்று சிவி சண்முகம் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.