Connect with us

இதெல்லாம் அரசியல் காழ்புணர்ச்சி!! முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேட்டி;

விஜயபாஸ்கர்

தமிழகம்

இதெல்லாம் அரசியல் காழ்புணர்ச்சி!! முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேட்டி;

இன்றைய தினம் அதிமுகவின் முன்னாள் மருத்துவத்துறை அமைச்சர் ஆன சி.விஜயபாஸ்கர் சொந்தமான இடங்களில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்பட்டது. ஏனென்றால் இதற்கு முன்னதாக அவர்களுக்கு சொந்தமான இடங்களில் அடுத்தடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் இன்றைய தினம் 18 லட்சம் அதிகமான பணம் மற்றும் தங்கம் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றினை லஞ்ச ஒழிப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார்.

அதன்படி அரசு இயந்திரத்தை அரசியல் காழ்புணர்ச்சியுடன் பயன்படுத்தியுள்ளனர் என்று சென்னையில் முன்னாள் அமைச்சர் பேட்டியளித்தார். எனது இரண்டு கைபேசிகளை மட்டுமே விசாரணைக்காக பெற்று சென்றுள்ளனர் என்றும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

கூடுதலாக எனது மற்றும் குடும்பத்தினரின் ஆதார் அட்டை, ரேஷன் அட்டை போன்ற முக்கிய ஆவணங்களை தான் எடுத்துச் சென்றுள்ளனர் என்றும் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top