தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் ரோசய்யா காலமானார்! பல தலைவர்கள் இரங்கல்; முதல்வர் புகழாரம்!

இன்று காலை அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது. தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் ரோசய்யா காலமானார். அவருக்கு எண்பத்தி எட்டு வயது என்பது குறிப்பிடத்தக்கது. வயது முதிர்வு காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கி ஐதராபாத் இல்லத்தில் ஓய்வில் இருந்த அவர் இன்று காலையில் உயிரிழந்தார்.

ரோசய்யா

குண்டூர் மாவட்டம், வெமுரு கிராமத்தில் 1933ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி பிறந்தார் முன்னாள் ஆளுநர் ரோசைய்யா. வணிகவியல் பட்டப்படிப்பை முடித்ததும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

1968, 1974 மற்றும் 1980 ஆகிய ஆண்டுகளில் ஆந்திர சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். முதன் முறையாக மரிசென்னா ரெட்டி அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தார்.

ஆந்திர முதல்வராக கடந்த 2009 முதல் 2010 வரை பதவி வகித்தார். 2011 முதல் 2016 வரை நம் தமிழகத்தின் ஆளுநராக பதவி வகித்தார். ரோசய்யாவின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் டுவிட்டர் வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளார். மிகுந்த அனுபவம்,அறிவாற்றல் நிறைந்த மூத்த அரசியல்வாதி ரோசைய்யா மறைவு வேதனை அளிக்கிறது என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment