Connect with us

பாரதமாதா நினைவாலயத்தின் பூட்டை உடைத்து பாஜக அடாவடி

gallerye 012002480 2816056

செய்திகள்

பாரதமாதா நினைவாலயத்தின் பூட்டை உடைத்து பாஜக அடாவடி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ் அழகிரி :

தருமபுரியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியிலுள்ள பாரத மாதா நினைவாலயத்தின் பூட்டின் கதவை உடைத்து பாஜக முன்னாள் எம்.பி. ராமலிங்கம் தலமையிலான பாஜகவினர் உள்ளே சென்ற சம்பவம் தொடர்பாக பதிலளித்த அவர், இலக்கிய செல்வன் குமரிஆனந்தன் அவர்களின் பெரும் முயற்சியினால் அன்றைய முதல்வர் அதற்கான உருவாக்கத்தினை ஏற்படுத்தினார்கள், இனறைக்கு பாஜகவை சேர்ந்தவர்கள் அந்த நினைவாலயத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்திருப்பது என்பது சமீபகாலமாகவே பாஜகவினர் இப்படி செய்துவருகிறார்கள்,

அவர்களுக்கு என்ன நிகழ்ந்திருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை, புதிதாக எதை அடைந்திருக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை, தமிழகத்தில் பாஜக நிராகரிக்கபட்ட சக்தி தான்,பாஜகவினர் எதற்காக அராஜகம் செய்கிறார்கள் குதிக்கிறார்கள் எனபதும் தெரியவில்லை, ஆர் எஸ் எஸ், வன்முறை கலாச்சாரத்தை தமிழகத்திலும் புகுத்த நினைக்கிறது பாஜக..

பாஜகவினர் பாரதமாதா நினைவாலயத்தின் பூட்டினை உடைத்து உள்ளே நுழைந்திருக்கும் சம்பவத்தினை தமிழக மக்கள் ஒரு போதும் ஏற்க மாட்டர்கள், கட்சியின் மாநிலத்தலமை இது தொடர்பாக மன்னிப்பு கேட்கவேண்டும், வருத்தம் தெரிவிக்க வேண்டும்… என தெரிவித்துள்ளார்.. கே. எஸ். அழகரி

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top