மருத்துவர் செய்யுற வேலையா இது?… சுப்பையாவுக்கு மார்ச் 31ம் தேதி வரை சிறை…!
அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர்களது வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஏபிவிபி முன்னாள் தலைவரும், மருத்துவருமான சுப்பையாவை மார்ச் 31ம் தேதி வரை காவலில் அடைத்து வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை நங்கநல்லூர் ராம்நகர் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏபிவிபி அமைப்பின் தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளருமான சுப்பையா வசிக்கிறார். அவரது வீட்டின் அருகே 62 வயது மூதாட்டி வசித்து வருகிறார். கடந்த 2019ம் ஆண்டு மூதாட்டிக்கும், சுப்பையாவிற்கு இடையில் கார் நிறுத்துவது தொடர்பாக இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த சுப்பையா அந்த பெண்ணின் வீடு முன்பு சிறுநீர் கழித்த நிலையில், இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக பெண்ணின் தரப்பில் ஆதம்பாக்கம்
காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பதை அடுத்து சுப்பையா மீது பெண் வன்கொடுமை உட்பட இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்றது.
இந்த வழக்கு 2 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வந்த நிலையில், சுப்பையாவை ஆதம்பாக்கம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். அங்கு ஏபிவிபி அமைப்புனர், பாஜக உள்ளிட்ட இந்து அமைப்பினர் சுப்பையாவை கைது செய்வதை தடுத்து நிறுத்தினர். இதனைக் கடந்து போலீசார் சுப்பையாவை அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.
அதன் பின்னர் சுப்பையா சென்னை ஆலந்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் மார்ச் 31ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
