உருவானது நான்காவது காற்றழுத்த தாழ்வு பகுதி! புயலாக மாறும் என எச்சரிக்கை!!

வங்கக்கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. குறிப்பாக நவம்பர் மாதத்தில் மட்டும் மூன்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் வங்கக் கடலில் உருவாகி தமிழகத்திற்கு பெரும் மழையை கொடுத்தது.

இந்திய வானிலை ஆய்வு மையம்

இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக கூறியுள்ளது. இது வங்கக்கடலில் உருவாகியுள்ள நான்காவது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதன்படி தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இது மாறும் என்று இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேற்கு, வடமேற்கு திசையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நகரம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவடைந்து வங்கக்கடல் பகுதியில் புதிய புயலாக உருவெடுக்கும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. புயல் சின்னம், தெற்கு ஆந்திரா, வடக்கு ஒடிசா இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment