அடுத்த சில மணி நேரத்திற்கு ஆபத்து! உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி!!

வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் நம் தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படுகிறது. குறிப்பாக வங்க கடலில் அடுத்தடுத்து மூன்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.

காற்றழுத்த தாழ்வு

இந்த நிலையில் வங்கக்கடலில் மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதனால் வங்ககடலில் மட்டும் கடந்த 15 நாட்களுக்குள் நான்கு காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவானது குறிப்பிடத்தக்கது.

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள இந்த நான்காவது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருமாறி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தற்போது உருமாறி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம்  கூறியுள்ளது. இவை புயலாக மாற வாய்ப்புள்ளதால் கடலோர மாவட்ட மக்களுக்கு தொடர் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்னும் சில நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment