
தமிழகம்
அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் இடம்-முன்னாள் அமைச்சர்கள் நேரில் சென்று ஆய்வு!!
கடந்த வாரம் அதிமுகவில் சார்பில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதன்படி வானரகம் திருமண மண்டபத்தில் அனைத்து மாவட்டங்களில் இருந்து முக்கியமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும் நிகழ்ச்சியின் பாதியிலிருந்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியே சென்றார். அவரது ஆதரவாளர்கள் ஒரு புறமாக கோஷமிட்டு வந்தனர். இன்று காலை ஓபிஎஸ் தரப்பிலிருந்து பொதுக்குழு கூட்டம் நடைபெற வாய்ப்பு இல்லை என்று தகவல் கிடைத்தது.
ஜூலை 11ஆம் தேதி அதிமுக சார்பில் மீண்டும் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் திடீரென்று முன்னாள் அமைச்சர்கள் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் இடத்தினை ஆய்வு செய்து கொண்டு வருகின்றனர்.
சென்னை வானரகத்தில் அதிமுக பொதுக்குழு நடைபெற உள்ள இடத்தில் முன்னாள் அமைச்சர்கள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, தங்கமணி, செல்லூர் ராஜு, மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு நடத்துகின்றனர்.
