Connect with us

இன்று பாஜகவில் இணையும் முன்னாள் முதல்வர்!! குழப்பத்தில் காங்கிரஸ்?

amarinder

செய்திகள்

இன்று பாஜகவில் இணையும் முன்னாள் முதல்வர்!! குழப்பத்தில் காங்கிரஸ்?

நம் இந்தியாவில் மிகவும் வலிமையான கட்சியாக உருமாறி உள்ளது பாரதிய ஜனதா கட்சி. தேர்தல் என்றாலே அதில் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றி என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.

இதனால் பல முன்னணி கட்சித் தலைவர்களும் பாஜகவில் இணைந்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று பாஜகவில் இணைகிறார் கேப்டன் அமர்ந்தர் சிங். பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் ஆன கேப்டன் அமரிந்தர் சிங்  இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைகிறார்.

தனது பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியையும் பாஜகவுடன் இன்று இணைத்து கொள்கிறார் கேப்டன் அமரிந்தர்  சிங். பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலுக்கு முன் காங்கிரஸிலிருந்து விலகி தனிக்கட்சி துவங்கிய நிலையில் பாஜகவில் ஐக்கியம் ஆகிறார் அமரிந்தர் சிங்.

ஏற்கனவே அவர் தனி கட்சி ஆரம்பித்தது காங்கிரஸில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பாஜகவில் அவர் இணைவது மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் தற்போது காங்கிரஸ் ஆட்சியும் பஞ்சாபில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top