Connect with us

கொரோனா பரிசோதனையில் ஃபோர்ஜரி! தவறான மொபைல் எண்களை தரும் நோயாளிகள்!!

corona test 1

செய்திகள்

கொரோனா பரிசோதனையில் ஃபோர்ஜரி! தவறான மொபைல் எண்களை தரும் நோயாளிகள்!!

கொரோனா பரிசோதனையில் ஃபோர்ஜரி! தவறான மொபைல் எண்களை தரும் நோயாளிகள்!!

தமிழகத்தில் அதிக அளவு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசிக்கு இணையான அளவிற்கு கொரோனா பரிசோதனைகளும் நாளுக்குநாள் நிகழ்ந்து கொண்டே வருகிறது.

அந்த வரிசையில் ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது.இந்த நிலையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் பரிசோதனையில் நிகழ்ந்து கொண்டே வருகிறது.

ஏனென்றால் பெரும்பாலான கொரோனா நோயாளிகள் தங்களது மொபைல் எண்ணை கூறாமல் தவறான எண்ணையே பரிசோதனை செய்பவர்கள் இடத்தில் வழங்குகின்றனர். இந்த நிலையில் தவறான செல்போன் எண்ணை தருவதாக  என்று மாநகராட்சி புகார் அளித்துள்ளது.

அதன்படி சென்னையில் அதிக அளவு கொரோனா பாதித்தவர்கள் தவறான தொலைபேசி எண்களை தருவதாக சென்னை மாநகராட்சி புகார் அளித்துள்ளது. ஒவ்வொரு நாளும் 40 எண்கள் வரை போலியானவை என்றும், ஒரு சில எண்கள் தவறானவைகளை கொரோனா நோயாளிகள் தருகின்றனர் என்றும் கூறியுள்ளது.

தவறான எண்களால் கொரோனா  பாதித்தவர்களை அடையாளம் காண்பதில் பெரும் சிக்கல் இருக்கிறது என்றும் சென்னை மாநகராட்சி கூறியுள்ளது. சென்னை மாநகராட்சி மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பல நகராட்சி, பேரூராட்சிகளில் இதுபோன்ற செயல்கள் அரங்கேறிக் கொண்டுதான் காணப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top