பழசெல்லாம் மறந்துடுங்க… எடப்பாடியை சமாதானத்திற்கு அழைக்கும் ஓபிஎஸ் டீம்!

அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை குறித்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் இரு தரப்பினரும் நீதிமன்றத்தை நாடிவரும் நிலையில் கும்பகோணத்தில் அதிமுக ஒ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஒட்டி உள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு.

WhatsApp Image 2022 08 27 at 12.38.50 PM

நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும், நடப்பவைகள் நல்லவையாக அமையட்டும் ,

2024 ல் அம்மாவின் நல்லாட்சி அமைந்திட ஒன்றிணைவோம் என்றும்

தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே என நகரில் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

இந்த சுவரொட்டிகளில் ஜெயலலிதா, ஓ பன்னீர்செல்வம், ஆர் வைத்திலிங்கம் மற்றும் இவர்களது ஆதரவாளர்கள் படங்கள் மட்டும் அச்சிடப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment