Doctor கனவை மறந்துடுங்க..? MBBS மாணவர்கள் அதிர்ச்சி

தமிழ்நாட்டில் மொத்தம் 38 அரசு மருத்துவக் கல்லூரிகள் உட்பட 71 மருத்துவக் கல்லூரிகள் தேசிய மருத்துவ ஆணையத்தின் அனுமதியுடன் இயங்கி வருகின்றன. இந்த 38 அரசு கல்லூரிகளில் மொத்தம் 5 ஆயிரத்து 25 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன.

இவற்றில் சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரி, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய மூன்று மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுவதாக இளநிலை மருத்துவ கல்வி வாரியம் அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இவ்வாறு நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 40 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு காரணமாக சொல்லப்படுவது கல்லூரிகள் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகள் படி செயல்படவில்லை என்பதுதான்.

அதாவது அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ள கல்லூரிகளில் சிசிடிவி கேமராக்கள், ஆதார் இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் வருகை பதிவு, பேராசிரியர்கள் எண்ணிக்கை தொடர்பான பல குறைபாடுகள் தேசிய மருத்துவ ஆணையம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட திடீர் ஆய்வுகளின் போது கண்டறியப்பட்டதாக மத்திய அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் தமிழகத்தில் மட்டும் சுமார் 500 மருத்துவ இடங்களுக்கான மாணவர் சேர்க்கை என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதனுடைய மூன்று மருத்துவக் கல்லூரிகளிலும் உள்ள பிரச்சனைகளை உடனடியாக சரி செய்யப்பட்டு இளநிலை மருத்துவக் கல்வி வாரியத்திற்கு ஆவணங்களை சமர்ப்பித்த பிறகு மாணவர் சேர்க்கைக்கு உடனடியாக அனுமதி கிடைத்துவிடும் என்று சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் மருத்துவம் பயில காத்திருக்கும் மாணவ மாணவிகளின் மத்தியில் இந்த அங்கீகாரம் ரத்து என்பது ஒரு குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் மேலும் 100 கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

நீங்க குடிக்கும் பால் சுத்தமானதா? கலப்படமானதா? கண்டறிய வழிமுறைகள்..!

இந்த பட்டியலில் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, மேற்குவங்கம், குஜராத், அசாம், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் இடம் பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பட்டியலிலும் தமிழ்நாடு இடம்பெற்றிருப்பதால் மருத்துவ கல்லூரியை தேர்வு செய்வதில் மாணவ மாணவிகளிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டு இருப்பதாக தெரிகிறது.

எனவே தமிழ்நாடு அரசு அனைத்து மருத்துவக் கல்லூரிகளையும் அவ்வப்போது ஆய்வு செய்ய குழு அமைத்து கல்லூரிகளில் உள்ள குறைபாடுகளை சரி செய்வதோடு மருத்துவ மாணவர்களுக்கு தரமான கல்வியை உறுதி செய்ய வேண்டும் என்பதை அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews