அந்நிய மரங்கள் அகற்றம்.. வனத்துறைக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!!

நீலகிரியில் உள்ள அந்நிய மரங்களை முழுமையாக அகற்றாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழக வனப்பகுதிகளில் பரவி இருக்கக்கூடிய அந்நிய மரங்களை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், விசாரணை அமர்வு இன்று வந்தது. அப்போது நீலகிரி மாவட்டத்தில் உள்ள 191 இடங்களில் அந்நிய மரங்கள் பரவி கிடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதில் 53 இடங்களில் மரங்களை அப்புற படுத்துவதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும், 16 இடங்களில் அந்நிய மரங்கள் அகற்றி ரூ.4 கோடி அளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மீதமுள்ளவைகள் படிப்படியாக அகற்றப்படும் எனும் மொத்தமுள்ள மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அப்போது பேசிய நீதிபதிகள் நீலகிரியில் 191 இடங்களில் உள்ள அந்நிய மரங்களை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

இதனை 15 நாட்களுக்குள் செயல்படுத்த வேண்டும் என கூறிய நீதிபதிகள் டிசம்பர் 22-ம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.