
Entertainment
இந்தி திணிப்பு: பாலிவுட் மற்றும் கன்னட நடிகர்களுக்கிடையே சொற்போர்…!!
மெல்ல மெல்ல தென்னிந்தியாவில் இந்தி திணிப்பானது நடைபெற்று வருகிறது. இதற்காக ஒவ்வொரு மாநில அரசும் முயற்சிகளை செய்து கொண்டு வருகின்றன. இந்தி பற்றி இந்தி மற்றும் தென்னிந்திய நடிகர்கள் இடையே கருத்து மோதல் நடைபெற்று வருகிறது.
அதன்படி இந்தி தேசிய மொழியா இல்லையா என்பது குறித்து நடிகர் அஜய் தேவகனுக்கும் கன்னட நடிகர்களுக்கும் இடையே சொற்போர் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்தி தேசிய மொழி என்று அஜய்தேவ்கன் கூறிய கருத்துக்கு இந்தி இன்று தேசிய மொழி அல்ல என்று நடிகர் கிச்சா சுதீப் பதிலளித்துள்ளார்.
நான் கன்னடத்தில் எழுதினால் உங்களுக்குப் புரியுமா என்றும் கிச்சா சுதீப் கேள்வி எழுப்பினார். இதனை குறிப்பிட்ட போது பலத்த கரவொலி எழுந்தது. உங்கள் படங்களை இந்தியில் டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள் என்று அஜய் தேவ்கன் கேள்வியினை கேட்டார்.
உடனே பதிலளித்த சுதீப் இந்தி உள்பட அனைத்து இந்திய மொழிகளையும் தாம் சம அளவில் மதிப்பதாக கூறியுள்ளார். நடிகை ரம்யாவும் அஜய் தேவ்கன் ஹிந்தி படத்தை திணிப்பதை நிறுத்துமாறும் கண்டித்துள்ளார். பாலிவுட் பாக்ஸ் ஆபீஸில் தற்போது தென்னிந்திய படங்கள் வசூலை குவித்து வரும் நிலையில் இவர் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
