Connect with us

வாடிவாசல் படத்திற்காக சூர்யா செய்த காரியம்: ஷாக்கான ரசிகர்கள்!!

11 1

பொழுதுபோக்கு

வாடிவாசல் படத்திற்காக சூர்யா செய்த காரியம்: ஷாக்கான ரசிகர்கள்!!

தமிழ் மட்டும் இல்லாமல் மற்ற மொழிகளிலும் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இந்நிலையில் சமீபகாலமாக சூர்யா நடிக்கும் படங்கள் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் மீண்டும் ஒரு ஹிட் படம் கொடுத்தே ஆக வேண்டும் என்று தீயாய் வேலைசெய்து வருகிறார்.

அந்தவகையில் சூரரைப்போற்று படமானது பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது மட்டுமில்லாமல் வசூலிலும் மாஸ் காட்டியது. இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடித்து வருகிறார்.

அதோடு நடிகர் சூர்யா இரட்டை வேடத்தில் வருவதாகவும் தகவல்கள் அண்மையில் வெளியாகியிருந்தது. இந்த சூழலில் வாடிவாசல் படத்தை பற்றி பேசிய இயக்குனர் வெற்றிமாறன் 2 நாட்கள் மாதிரி படப்பிடிப்பு நடைபெற்றதாக கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து காங்கேயம் காளைகளை வாங்கி சூர்யா வளர்த்து வருவதாக தெரிவித்தார். படத்திற்காக மாடுபிடி வீரர்களும் நடிகர் சூர்யா ஆலோசனை பயிற்சி பெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், படத்திற்காக இரண்டு காளைகளை வாங்கி வளர்ந்து வரும் சூர்யாவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top