
தமிழகம்
குற்றால அருவிகளில் மூன்றாவது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!!
நம் இந்தியாவில் தற்போது தென்மேற்கு பருவக்காற்று காலம் நடைபெற்று கொண்டு வருகிறது. இந்த காலநிலையில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் பரவலாக மழை கிடைக்கும்.
இதனால் அங்குள்ள அருவிகளில் குளிப்பதற்கு தடையும் தொடர்ந்து விதிக்கப்படும். ஆனால் மே மாதம் முதலே தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அருவிகளில் குளிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
அதிலும் தமிழகத்திலேயே பிரதான அருவியாக கருதப்படுகின்ற குற்றால அருவியில் சமீபகாலமாக குளிப்பதற்கு தடை மாறி மாறி விதிக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் மீண்டும் அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி தென்காசி மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அவை குறையாததால் குற்றால அருவிகளில் குளிப்பதற்கு மூன்றாவது நாளாக தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி குற்றாலம், பழைய குற்றாலம், ஐந்தருவி என அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
