அடுத்த பத்தாண்டுகளில் விவசாயிகள் நிலைமையே வேறு! எங்கும் கடன் கேட்டு நிற்க மாட்டார்கள்!!!
இன்றைய தினம் தமிழகத்தின் சட்டப்பேரவையில் பட்ஜெட் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டது. இதில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசினார்.
அவர் வேளாண்துறையில் தமிழ்நாடு அரசு புதிய புரட்சியை உருவாக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். அதன்படி அடுத்த 10 ஆண்டுகளில் வேளாண் துறையில் தமிழ்நாடு அரசு புதிய புரட்சியை உண்டாக்கும் என்று அவர் கூறினார்.
நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதிலளிக்கிறார். அடுத்த 10 ஆண்டுகளுக்கு பின் விவசாயிகள் எங்குமே கடன் கேட்டு நிற்க மாட்டார்கள் என்று சட்டப்பேரவையில் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறினார்.
எதிர் தரப்பினரின் கருத்து சிறந்ததாக இருந்தால் அதை ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசுதான் திமுக அரசு என்றும் சட்டப்பேரவையில் அமைச்சர் கூறினார். கடந்த வாரம் சனிக்கிழமை என்று வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கு எதிர் கட்சியினர் பலரும் தங்களது கருத்துக்களை வரிசையாகப் பதவிக்கு வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
