சென்னை மாமன்றத்தில் முதன் முறையாக ஒலித்த தமிழ்தாய் வாழ்த்து – காரணம் என்ன?

சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் முதல் முறையாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கியுள்ளது.

சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் ரிப்பன் மாளிகையில் மேயர் தலைமையில் இன்று நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில், தமிழ்நாடு குறித்து சர்ச்சையாக பேசிய ஆளுநர் ரவியை கண்டித்து சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும், மாமன்றக் கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்,

அதற்கு, வருகின்ற மாமன்றக் கூட்டம் முதல் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்படும் என மேயர் பிரியா அறிவித்திருந்தார். இந்நிலையில், இன்றைய தினம் நடைபெறவுள்ள மாநகராட்சி மாமன்றக் கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்து தொடங்கப்பட்டது.

நூற்றாண்டுகள் கண்ட சென்னை மாநகராட்சியின் மாமன்றத்தில் முதல்முறையாக தமிழ்த்தாய் வாழ்த்துடன் மன்றக்கூட்டம் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் மாமன்ற கூட்டம் முடியும் போது தேசிய கீதம் ஒலிக்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் மறைந்த சென்னை மாநகராட்சி 122வது மன்ற உறுப்பினர் ஷீபாவாசி- விற்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அவை முடிகிறது. நாளை மறுநாள் மார்ச் 2 ஆம் தேதி மீண்டும் சென்னை மாநகராட்சி கூடுகிறது அதில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.