அமெரிக்காவில் இருந்து ஏர் அம்புலன்ஸ் விமானத்தில் 26 மணி நேரம் பயணம் செய்த பெண் நோயாளி சென்னை வந்தடைந்தார்.
பெங்களூரு இந்திரா நகரை சேர்ந்த 67-வயது பெண் தனது மகன்களோடு கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் இதனால் அவதிப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே சென்னையில் அப்பெண் மணிக்கு சிகிச்சை அளிக்க முடிவெடுத்தனர்.
இதனையடுத்து அவர் ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் சென்னை அழைத்துவரப்பட்டார். குறிப்பாக சிகிச்சைக்காக உலகிலேயே முதன்முறையாக சுமார் 26 மணி நேரம் பயணம் செய்த விமானம் என கூறப்படுகிறது.
மேலும், இந்த விமானத்தில் பயணம் செய்ய சுமார் 1 கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.