வரலாற்றிலேயே முதன் முறை… தமிழக அமைச்சர்கள் இத்தாலி பயணத்தின் பரபரப்பு பின்னணி!

வரலாற்றிலேயே முதன் முறையாக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் புனிதர் பட்டம் பெறுவதால் அந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழக அமைச்சர்கள் இத்தாலி புறப்பட்டுச் சென்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்த தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அமைச்சர்கள் இத்தாலி பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இத்தாலி நாட்டின் ரோம் நகரில் வரும் 15ஆம் தேதி மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

போப் ஆண்டவர் புனிதர் பட்டத்தை இவருக்கு அறிவிக்கிறார். தமிழகத்தை சேர்ந்த ஒருவர் புனித பட்டம் பெறுவது வரலாற்றிலேயே முதல்முறையாகும்.

இதனால் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலன் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான்,சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் சென்னையிலிருந்து இத்தாலி புறப்பட்டனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment