Connect with us

பின்வாங்குறோமா?! அதெற்கெல்லாம் வாய்ப்பே இல்லை: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

anbil 1200

செய்திகள்

பின்வாங்குறோமா?! அதெற்கெல்லாம் வாய்ப்பே இல்லை: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

இராஜபாளையம் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டே பின் வாங்குவது என்பது நடைபெறுவதாக பள்ளிக் கல்வித்துறை என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

இராஜபாளையம் ராம்கோ கல்லூரியில் தலைமை ஆசிரியர்கள் தலைமை பண்பு மேம்பாட்டிற்கான கருத்தாளர் பயிற்சி நடைபெற்று வருகிறது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,

இந்தியாவிலேயே எங்கும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில்தான் தலைமை ஆசிரியர்களை தங்க வைத்து இது போன்று பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு ஒன்பதரை கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.

பள்ளிக்கல்வித்துறை திட்டங்களை அறிவித்துவிட்டு பின்னர் பின்வாங்குவதாக எழும் குற்றச்சாட்டிற்கு பதில் அளித்த அவர், பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக பல மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று நாம் நினைக்கின்றோம். அதற்காக சில பின்வாங்குவது என்பது தவறில்லை. மக்களுக்காக சமூக சேவையாக செய்யும் துறைதான் பள்ளி கல்வி துறை. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டே பின் வாங்குவது என்பது நடைபெறுகிறது.

போதைப் பொருட்களை கட்டுப்படுத்த காவல்துறை காவல்துறை தங்களை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டுள்ளது.

போதை இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும் என்ற தமிழக முதலமைச்சரின் கனவு விரைவில் நனவாகும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top