நாளைய தினம் நம் தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்படுகிறது. ஏனென்றால் தமிழகத்தில் கொரோனாவின் பரவல் வெகுவாக குறைந்துள்ளதால் மீண்டும் பள்ளிகளை திறக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதனால் நாளை முதல் பள்ளிக்கு செல்பவர்களின் கவனத்திற்கு சில தகவல்கள் கிடைத்துள்ளது. அதன்படி,
- நாளை முதல் அனைத்து பள்ளிகளுக்கும் முழுமையாக செயல்பட உள்ள நிலையில் பள்ளிகள் சுத்தம் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
- பள்ளிகளுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
- பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகள், பணியாளர்கள், அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும்.
- அடிக்கடி கைகளை சோப்பு அல்லது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.
- பள்ளிக்கு வரும்போது மாணவர்களின் உடல் வெப்பநிலையை சோதனை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் உடனே அவர்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி தனிமைப்படுத்த வேண்டும்.
- மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்து உணவு உண்ணக்கூடாது.
- பள்ளிகளில் முகக் கவசம்,தனி நபர் இடைவெளியை கடைபிடிக்கவேண்டும்.
- ஆசிரியர்களும், 15 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட மாணவர்களும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.