அந்த மனசு தான் சார் கடவுள்.. விபத்தில் சிக்கியவருக்கு இறையன்பு உதவி..!!

போக்குவரத்து நெரிசல் என்பது சற்று அதிகமாகவே இருக்கும். இதனால் சாலை விபத்துக்கள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சென்னை நேப்பியர் பாலத்தில் ஒருவர் பைக் ஓட்டி சென்றதாக தெரிகிறது.

அப்போது பைக் ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இதில் கால் எழும்பு முறிந்து இரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருந்ததாக தெரிகிறது. அந்த வழியாக வந்த தலைமை செயல் அதிகாரி உடனடியக காவல்துறை மற்றும் ஆம்புலன்ஸ்-க்கு தகவல் கொடுத்துள்ளார்.

பின்னர் படுகாயமடைந்தவரை ஆம்புலன்ஸில் ஏற்றி ஓமலூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் காயமடைந்தவரின் பெயர் வேளச்சேரியை சேர்ந்த குமரேசன் என்பது தெரியவந்தது.

தற்போது விபத்து குறித்து அண்ணா சதுக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் தலைமை செயலாளர் இறையன்பு வாகனத்தில் உள்ளவர்களை காப்பாற்றிய வீடியோவானது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இத்தகைய வீடியோவிற்கு பொதுமக்கள் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.