கோவை மாவட்டத்தில் இரண்டு நாட்களில் 4-வது முறையாக பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைப்பெற்றுள்ளது.
கடந்த சில தினங்களாகவே கோவையில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்றைய தினத்தில் பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தை விசாரிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பொள்ளாச்சியில் பாஜக நிர்வாகி வீட்டில் வாகனங்களை சேதப்படுத்திய நிலையில், தற்போது பாஜக நிர்வாகி மோகன் என்பவரது கடையின் முன் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக போலீசார் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது. மேலும், பாஜகவினருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டுமென தொண்டர்கள் மத்தியில் கோரிக்கை வைத்துள்ளனர்.