அடடே! இணையத்தில் லீக்கானது வாரிசு, துணிவு; படக்குழுவினர் அதிர்ச்சி!!

விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு ஆகிய இரண்டு படங்களில் ரிலீசான சில மணி நேரங்களில் இணையத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் மிகப்பெரிய அளவிற்கு முன்னணி நடிகர்கள் நடித்திருந்தாலும், அவர்களின் படம் ரிலீஸ் ஆகுவதற்கு முன்னதாகவே இணையத்தில் லீக் ஆகுவது வாடிக்கையாக விஷமாக அமைகிறது.

அந்த வகையில் இன்றைய தினத்தில் வாரிசு, துணிவு ஆகிய 2 படங்களும் நள்ளிரவு 1 மணியில் இருந்து உலகம் முழுவதும் திரையரங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் படம் வெளியாகி சுமார் 5 மணி நேரம் ஆன நிலையில் இணையத்தில் லீக் ஆனதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே 2 படங்களும் இணையத்தளத்தில் வெளியிடக்கூடாது என்பதற்காக படக்குழுவினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். அப்போது இரண்டு படங்களும் இணையத்தில் வெளியிட தடைவிதிக்கப்பட்டு இருந்தது.

இந்த சூழலில் ரகசியமாக காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளதால் படத்தின் வசூல் பாதிக்கப்படுமோ? என்ற அச்சம் எழுந்துள்ளது. மேலும், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.