
தமிழகம்
அரசு ஊழியர்களுக்கு ‘செக்’ … தமிழக அரசு அதிரடி உத்தரவு!!!
கடந்த சில நாட்களாகவே குஜராத், டெல்லி, மகாராஷ்டிரா, உ.பி போன்ற மாநிலங்களில் கொரோனா பரவல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் எதிரொலியாக தமிழகத்திலும் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுகிறது.
குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம்,திருவாரூர், செங்கல்பட்டு, கோயம்புத்தூர், திருப்பூர் போன்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனை மீறும் நபர்களுக்கு ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டு இருந்தது. இந்த சூழலில் அலுவலகங்களில் பணியாற்றும் அனைத்து அரசு ஊழியர்களும் முழு நேரமும் கட்டாயம் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும் என்ற உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் சுகாதாரம், வருவாய், காவல் மற்றும் உள்ளூர் நிர்வாகங்களிலும் இந்த நடவடிக்கைகள் கட்டாயம் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பொதுமக்கள் பின்பற்றுகிறதா என்பதை குறித்து கண்காணிக்க படுகிறதா என்பதை ஆராய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
