மதுராவுக்கு சுற்றுலா வந்த 4 வெளிநாட்டுப் பயணிகளுக்கு ஒமிக்ரான்: அதிர்ச்சியில் உபி அரசு

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மதுராவுக்கு சுற்றுப் பயணம் வந்த நான்கு வெளிநாட்டு பயணிகளுக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தென் ஆப்பிரிக்கா உள்பட ஒருசில நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் இந்த வைரஸ் மிகவும் ஆபத்தானது என்றும் மனித குலத்திற்கே பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் உலக சுகாதார மையம் எச்சரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து இந்தியா உள்பட பல நாடுகள் ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதும் தமிழக அரசும் இது குறித்து சமீபத்தில் ஆலோசனை செய்து அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் போதிய கட்டுப்பாட்டு மையங்களை அமைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா என்ற பகுதிக்கு சுற்றுலா வந்த 2 பெண்கள் உள்பட 4 வெளிநாட்டு பயணிகளுக்கு ஒமைக்ரான் வைரஸ் அறிகுறி இருந்ததாகவும் இதனை அடுத்து அவர்களுக்கு பரிசோதனை செய்தபோது, ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் உத்தரப்பிரதேச மாநில அரசு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

இந்த நிலையில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட நால்வரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களது உடல்நிலை மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment