ஒரு நீதிமன்றத்திற்கே இந்த நிலை என்றால்,அப்போ பொதுமக்களின் நிலை என்ன? நீதிபதிகள் வருத்தம்!

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் ஆங்காங்கே மழை நீர் தேங்கி உள்ளன. இதனால் தமிழகத்தில் மழைநீர் வடிகால் செய்யும் முறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஆயினும் ஒரு சில பகுதிகளில் மழைநீர் அப்படியே தேங்கிய நிலையில் காணப்படுகிறது.

மழை

 

அதுவும் குறிப்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சுற்றி மழைநீர் தேங்கியுள்ளது. இது குறித்து நீதிபதிகள் மிகுந்த வேதனை தெரிவித்துள்ளனர். அதன்படி நீதிமன்ற வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீர், கழிவுநீரை அகற்ற அறிவுறுத்தியும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

மாவட்ட ஆட்சியரும், மாநகராட்சி ஆணையரும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஹை கோர்ட் கூறியுள்ளது. நீதிமன்றத்திற்கு இந்த நிலை என்றால் பொது மக்களின் நிலை என்ன? என்று உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

பெரியார் வைகை நீர் பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பு இரண்டு வாரத்தில் அகற்ற உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. ஏதேனும் தவறும் பட்சத்தில் மதுரை ஆட்சியர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நேரிடும் என்று நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment