46 மாணவர்களுக்கு உறுதியானது கொரோனா தொற்று! ஒரு வாரத்திற்கு கல்லூரி மூடல்!!: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

2019ம் ஆண்டில் இறுதியிலிருந்து உலகமெங்கும் கொரோனாவின் பாதிப்பு அதிதீவிர வேகத்தில் பரவ தொடங்கியது. ஆனால் இந்த பாதிப்பை இந்தியா மிகவும் நுணுக்கமாக கட்டுப்பாட்டு விதிகளை அமல்படுத்தி கொரோனாவின் பாதிப்பை கட்டுப்படுத்தியது.

கொரோனா

ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்டுப்படுத்தப்பட்ட கொரோனா பாதிப்பு 2021 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கியது. இதன் விளைவாக கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு இந்திய அளவில் மீண்டும் உயரத் தொடங்கி விட்டது.

குறிப்பாக தமிழகத்திலும் நாளுக்குநாள் மாணவர்கள் மத்தியிலும் இந்த கொரோனாவின் பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்ஐடி கல்லூரி நிறுவனத்தில் படிக்கும் 46 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

எம்ஐடி கல்லூரி நிறுவனத்தில் படிக்கும் 1417 பேருக்கு நடைபெற்ற கொரோனா  பரிசோதனை முடிவில் இதுவரை 46 மாணவர்களுக்கு தொற்று உறுதியாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் பல மாணவர்களின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டி உள்ளதால் எண்ணிக்கை பாதிப்பு  உயரக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நாற்பத்தி ஆறு பேருக்கு கொரோனா   பாதிப்பு உறுதியானதால் ஒருவாரம் எம்ஐடி கல்லூரி மூடப்படும் என்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் உத்தரவிட்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment