கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. தொற்று பரவல் படிப்படியாக குறைந்து நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டது
இந்நிலையில் நடப்பாண்டில் தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அறிவிக்கப்பட்ட நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மே 5 ஆம் தேதி தொடங்கி 28-ஆம் தேதியுடம் நிறைவடைந்தது.
இதில் மே 13-ஆம் தேதி பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வேதியியல் பாடம் நடைப்பெற்றது. இதில் மாணவர்களுக்கு வினா எண்கள் தவறாக கேட்கப்பட்டதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து வேதியியல் பாடத் தேர்வில் 2 கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. அதன் படி, வேதியியல் பாடத்தேர்வில் பகுதிஎண்ணில் கேள்வி எண் 9 அல்லது கேள்விஎண் 5 எழுதியவர்களுக்கு முழுமதிப்பெண் வழங்கப்படும் என்றும் பகுதி 2-ல் கேள்வி எண் 29 எழுதியவர்களுக்கு முழுமதிப்பெண் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த அறிவிப்பால் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.