கேரளாவை சேர்ந்த காதல் ஜோடிகள் அர்ஜென்டினா – பிரான்ஸ் ஜெர்சிக்களை அணிந்துகொண்டு திருமணம் செய்த நிகழ்வு இணையவாசிகள் மத்தியில் கவர்ந்துள்ளது.
ஞாயிற்றுக் கிழமையன்று கால்பந்து உலகக்கோப்பை இறுதிப் போட்டி நடைப்பெற்றது. இதில் பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா உலக கோப்பையை தன்வசப்படுத்தியது. இந்த போட்டியில் ரசிகர்கள் பலர் தங்களது ஆதரவுகளை தெரிவிக்கும் வகையில் ஆட்டு குட்டிகளுக்கு வண்ண மிடுதல், யாகம் செய்யது போன்ற நிகழ்வுகளில் பங்குப்பெற்றனர்.
அந்த வகையில் கேரளாவில் காதல் ஜோடிகள் ஒருவர் தங்களது திருமண ஆடைகளுக்கு மேல் மனம் கவர்ந்த கவர்ந்த கால்பந்து வீரர்களின் ஜெர்சிக்களை அணிந்திருப்பது கால்பந்து ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதன் படி, மணமகள் ஆதிரா பிரான்ஸ்க்கு ஆதரவாகம், மணமகன் சச்சின் அர்ஜென்டினா ஜெர்சி உடையை அணிந்திருந்தது காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.
அதே போல் அர்ஜென்டினாவின் வெற்றியை கொண்டாடும் விதமாக திருச்சூரில் உள்ள ஓட்டல் உரிமையாளர் ஒருவர் இலவசமாக பிரியாணியும் வழங்கியுள்ளார். இதனை தொடர்ந்து ஜாம்பவான்களின் ரசிகர்கள் பிரமாண்ட கட் அவுட் வைத்தற்கு பிரேசில் வீரர் நெய்மர் கேரள ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து டுவிட் செய்தார்.